போக்குவரத்துக் காவல் துறைக்குப் புது சுற்றுக்காவல் வாகனங்கள்

போக்குவரத்துக் காவல் துறைக்குப் புது சுற்றுக்காவல் வாகனங்கள்

1 mins read

போக்குவரத்துக் காவல் துறை நெடுஞ்சாலை சுற்றுக் காவலுக்குப் பயன்படுத்துவதற்காக புதிய 'பிஎம்டபிள்யு' (BMW) வாகனங்களை வாங்கியுள்ளது. இந்த ஜெர்மானிய கார்வகை 1990களின் பிந்தைய ஆண்டுகளில்தான் போக்குவரத்துக் காவல் துறையால் கடைசியாகப் பயன்படுத்தப்பட்டது. தற்போது சுற்றுக் காவலுக்குப் பயன்படுத்தப்படும் சுபாரு வாகனங்களுக்குப் பதிலாக இந்த வாகனங்கள் அறிமுகம் கண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பின் வாகன மாற்றுத் திட்டத்தின்படி புதிய சுற்றுக்காவல் வாகனங்கள் பழைய வாகனங்களுக்குப் பதிலாக கொண்டு வரப்படும் என்றும் போக்குவரத்துக் காவல் துறையின் செயல்பாட்டுத் திறனை இது மேம்படுத்தும் என்றும் போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இந்தப் புதிய வாகனங்கள் 2019 ஆண்டின் முற்பகுதிக்குள் தயாராகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.