நிறுவனங்கள் சட்டத்தை மீறிய தற்காக கடந்த செவ்வாய்க்கிழமை நிறுவன இயக்குநர் லோரன்ஸ் ஃபொங் கொக் லியொங்குக்கு இதுவரை இல்லாத அளவுக்கு $57,000 அபராதமாக விதிக்கப் பட்டது. அதோடு நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். வருடாந்தர பொதுக் கூட்டங் களுக்கு ஏற்பாடு செய்யாததற்கா கவும் 19 நிறுவனங்களுக்கான வருடாந்தர வருவாய் தகவல் களைத் தாக்கல் செய்யத் தவறி யதற்காகவும் ஃபொங் மொத்தம் 38 குற்றச் சாட்டுகள் ஒப்புக் கொண்டதாக கணக்கியல், நிறு வனக் கட்டுப் பாட்டு ஆணையம் (அக்ரா) கூறியது. தண்டனை விதிக்கும் போது மேலும் 78 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
சட்டத்தை மீறியவருக்கு $57,000 அபராதம்
1 mins read

