அதிவேக ரயில் திட்டத்தைத் தள்ளிப்போட பேச்சுவார்த்தை

அதிவேக ரயில் திட்டத்தைத் தள்ளிப்போட பேச்சுவார்த்தை

1 mins read

சிங்கபூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான அதிவேக ரயில் திட்டத்தைத் தள்ளிப்போடுவது குறித்து மலேசிய அரசாங்கம் சிங்கப்பூருடன் பேச்சுவார்த்தை நடத்தும் என மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது கூறியுள்ளார். "பிரச்சினை என்னவெனில், நாங்கள் ஒரு தரப்பாக உடன் பாட்டைக் கைவிட்டால், நாங்கள் பெரிய அளவிலான தொகையை இழப்பீடாக வழங்க வேண்டி இருக்கும்," என அவர் நாடாளு மன்றத்திற்கு வெளியே நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "அதிவேக ரயில் திட்டத்திற் கான கட்டுமானப் பணிகளை நாங்கள் மேற்கொள்ளப்போவ தில்லை என்று நாங்கள் கூற முடியாது.

ஆனால் இந்தத் தருணத்தில் அதற்கான நிதி எங்களிடம் இல்லை. எனவே, இத்திட்டத்தை நாங்கள் தாமதப்படுத்த வேண்டி உள்ளது," என டாக்டர் மகாதீர் விவரித்தார்.