பதின்ம வயது காற்பந்து வீரர் பென் டேவிஸ் தேசிய சேவையை ஆற்றும் உத்தேசம் அவரது குடும்பத்துக்கு இல்லை என்று தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டு உள்ளது. தேசிய சேவையை பென் தள்ளிப் போடுவதற்காக அளிக்கப் பட்டிருந்த விண்ணப்பத்தில், பென்னின் தந்தை திரு ஹார்வி டேவிஸ், தமது மகன் சிங்கப் பூருக்குத் திரும்பும் தேதி குறித்து எவ்வித உறுதியையும் அளிக்கவி ல்லை. தமது மகனின் தனிப் பட்ட தொழில்சார்ந்த விருப்பத்திற்கா க சிங்கப்பூர் குடியுரிமையைக் கைவிடுவதைத் தாம் ஆதரிப்ப தாகவும் திரு ஹார்வி செய்தியா ளர் களிடம் கூறி யிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்காப்பு அமைச்சின் இந்தக் கருத்து வந்து உள்ளது. அமைச்சின் அறிக்கை க்கு பதிலளித்துள்ள திரு ஹார்வி, பென் தேசிய சேவை ஆற்றுவதற்காக சில தேதிகளைத் தாம் மின்னஞ்சல் மூலம் கலாசார, சமூக, இளையர்துறை அமைச் சிடம் தெரிவித்ததாகவும் தம் மகன் தேசிய சேவை ஆற்று வதற்குத் தமது குடும்பத்தின் முழு ஆதரவு இருப்பதாகவும் கூறினார். பின்னர் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தற்காப்பு அமைச்சு, காற்பந்தில் பென் சாதனை படைத்திருந்தாலும் அது அவரு டைய தனிப்பட்ட தொழில்சார்ந்த விருப்பம் என்றும் அது நாட்டின் நலனுக்கு அல்ல என்றும் கூறியது. தேசிய சேவை யைத் தள்ளிப் போட பென்னின் விண்ணப்பித் தைத் தற்காப்பு அமைச்சு ஜூன் 11ஆம் தேதி நிராகரித்தது.

