சான்: தகுதிக்கு முன்னுரிமை வழங்கும் முறைக்கான பண்புகள் நிலைநாட்டப்பட வேண்டும்

சான்: தகுதிக்கு முன்னுரிமை வழங்கும் முறைக்கான பண்புகள் நிலைநாட்டப்பட வேண்டும்

1 mins read
222520f5-6c20-4122-ae07-d3b3a9be504f
-

நாட்டில் சிறந்த வழிமுறையை உருவாக்க பொதுத் துறைத் தலைவர் களுக்கு தாம் சவால் விடுத்துள்ள அதே வேளையில், சிங்கப்பூரை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ள தகுதிக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பான பண்பு நலன்களை நிலைநாட்ட வேண்டும் என பொதுத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாண்டு பொதுச் சேவை ஆணையம் வழங்கிய உபகாரச் சம்பளத்தைப் பெற்ற மாணவர் களிடம் நேற்று முன்தினம் பேசிய அவர், சிங்கப்பூர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சிக்கலானவையாக உருவெடுக்கும் என்பதால் நாட்டின் தலைமைத்துவத்தில் அனுபவமும் அதற்கேற்ப பின்புலமும் இடம் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் எனக் கூறினார்.'

கிராண்ட் கோப்தோர்ன் வாட்டர்ஃபிரண்ட்' ஹோட்டலில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற் கல்லூரி, செயிண்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரி உள்ளிட்ட 15 வெவ்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மொத்தம் 93 உபகாரச் சம்பளங்கள் வழங்கப்ப ட்டன. "நீங்கள் ஆற்றல், கடப்பாடு மிக்கவர்களாக இருந்தால் உங்க ளது ஆற்றலை மேம்படுத்த நம் நாடு உங்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்புகளை வழங்கும்," என்ற திரு சான், நாட்டுக்கு சேவையாற்ற தகுதிக்கு முன்னுரிமை வழங்கப் படும் முறை தலைசிறந்தவர்களை ஈர்க்கும் என நம்பிக்கை தெரிவி த்தார்.