அறிவு வளர்ச்சி குன்றியோருக்கு பொறியியல் துறையில் வேலைப் பயிற்சி வகுப்பு

அறிவு வளர்ச்சி குன்றியோருக்கு பொறியியல் துறையில் வேலைப் பயிற்சி வகுப்பு

1 mins read
4cdb439e-0c52-4f59-9bbe-e56ce6397335
-

அறிவு வளர்ச்சி குன்றியோருக் கான புதிய பயிற்சி வகுப்பு, பொறியியல், பராமரிப்புத் துறைக ளுக்கான வேலைகளுக்குத் தயார் செய்கிறது. கட்டட, வசதிச் சேவைப் பயிற் சியை முடிப்பவர்கள், தொழில் கல்விக் கழகத்திலிருந்து சான்றி தழைப் பெறுவர். அத்துடன் 'ஏஜிஸ்' என்ற உள்ளூர் பொறி யியல் கட்டுமான நிறுவனத்தில் அவர்களுக்கு நிரந்தர வேலை கொடுக்கப்படும். ஒன்பது மாதங்கள் நீடிக்கும் அந்த பயிற்சி திட்டத்தை 'ஏஜிஸ்' நிறுவனத்துடன் சமூக சேவை நிறுவனமான சிறப்புத் தேவை உடையோருக்கான சங்கம் ('ஏபிஎஸ்என்') நடத்துகிறது.

வேலைப் பயிற்சி வகுப்போடு தொடங்கும் இந்தத் திட்டத்தில், ஹோட்டல்களில் ஆறு மாத வேலை பயிற்சியும் உள்ளடங்கும். 'ஷாங்ரிலா', 'ஜேடபிள்யூ மெரியட்' ஆகியவை அந்த ஹோட்டல்களில் சில. "குறைபாடு உள்ளவர்கள் வழக்கமாக உணவு, பானத்துறை போன்ற குறிப்பிட்ட சில துறை களில் மட்டும் பணியாற்றுவர். இதுபோன்ற திட்டங்களால் அவர் கள் இனி புதிய துறைகளில் நுழையலாம். வேலைச் சந்தைக்கு அதிகம் தேவைப்படும் திறன் களையும் அவர்கள் பெற்றுக் கொள்ளலாம்," என்று 'ஏபிஎஸ்என்' அமைப்பின் தலை வர் கிறிஸ்டஃபர் டே தெரிவித் தார்.

பெரியவர்களுக்கான ஏஎஸ்பிஎன் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாவனை ஹோட்டல் அறையில் கட்ட, வசதிகள் சேவைத் திட்டத்தின் மாணவர்கள் சாயம் பூசுதல், சிலிக்கான் பசையிடுதல் போன்ற பணிகளைச் செய்கிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்