தண்ணீர் புத்தாக்கத்தில் அதிக கவனம் தேவை

1 mins read
ff4466f7-f144-4465-b653-3f47ce1a23c1
-

தண்ணீர் தொடர்பான புத்தாக்கத் திலும் தண்ணீர் நிர்வாகத்திலும் சிங்கப்பூர் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்று சுற்றுப் புற நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நியூயார்க்கில் புதன் கிழமை நடைபெற்ற உயர்நிலையி லான அரசியல் கருத்தரங்கில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாட்டு தொண்டூழிய தேசிய மறுஆய்வு கருத்தரங்கில் பங்கேற்ற 47 நாடுகளில் சிங்கப் பூரும் ஒன்று.

அரசியல் தலைமைத்துவம், வழிகாட்டுதல், 2030ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய மேம்பாடு தொடர்பில் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன. பருவநிலை மாற்றத்தால் அடிக் கடி மாறும் வானிலையை எதிர் நோக்கும்போது மீள்திறனைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று திரு மசகோஸ் கருத்தரங்கில் தெரிவித்தார். "எங்களது தேசிய நீர் மறு பயனீட்டு முறை, ஒவ்வொரு கழிவு நீர்த்துளியை எடுத்து அதனை, சுத்திகரிக்கப்பட்ட நீரான 'நியூ வாட்டர்' நீராக மாற்றுகிறோம்," என்றும் அவர் கூறினார்.

கழிவுநீரைச் சேகரித்து சுத்திகரிப்புக்கு அனுப்பப்படும் சுரங்க சாக்கடை அமைப்பைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார். "தற்போது 48 கிலோமீட்டர் நீளங்கொண்ட அந்த சுரங்கம், 60 கிலோமீட்டர் நீளமான சாக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. 2025க் குள் அந்தச் சுரங்கம் 100 கிலோ மீட்டருக்கு நீட்டிக்கப்படும்," என்று அவர் கூறினார்.

"நீரை முடிவில்லாமல் மறுபயனீடு செய்வதன் மூலம், சிங்கப்பூரின் நீர்வளம், வறண்ட பருவநிலையின்போதும் பாதுகாக்கப்படும். இதனால் சிங்கப்பூரின் நீர் வளத்தின் நிலைத்தன்மை கட்டிக் காக்கப்படும். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தேவைப் படும் மீள்திறனையும் இது மேம்படுத்தும்," என்றார் அவர்.