பீதியடைவதற்கு எதுவுமில்லை: பிரதமர் லீ

பீதியடைவதற்கு எதுவுமில்லை: பிரதமர் லீ

1 mins read

இணையத் தாக்குதல் மூலம் தமது வெளிநோயாளி மருந்து தரவு திருடப்பட்டதில் பீதியடைவதற்கு எதுவுமில்லை என்று பிரதமர் லீ சியன் லூங் (படம்) தெரிவித்துள் ளார். சிங்ஹெல்த் தரவுத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல் மூலம் 160,000 பேரின் வெளிநோயாளி மருந்துக்குறிப்புகள் திருடப்பட்டன. அவ்வாறு திருடப் பட்டவற்றில் பிரதமரின் மருந்து விவரங்களும் அடங்கும். இது தொடர்பாக பிரதமர் லீ தமது ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.

தாக்கு தலை நடத்தியவர்கள் தமது மருந்து தரவை 'குறிப்பாக, மீண்டும் மீண் டும்' குறிவைத்ததாகஅவர் கூறியுள்ளார். "எதனை அறிந்து கொள்ள தாக்குதல் காரர்கள் முனைந்தார்கள் என்பது எனக்குத் தெரி யாது. ஒருவேளை அரசாங்கம் தொடர்பான ரகசியங்களை அறிவ தற்கான வேட்டையை அவர்கள் நடத்தி இருக்கலாம். அல்லது குறைந்த பட்சம் என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த அவர்கள் முயன்றி ரு க் க லா ம் . " அ ப் ப டி இருப்பின், அவர்கள் ஏமாற்றம் அடைந் திருப்பார்கள். நான் சாதாரணமாக பொது மக்களிடம் கூறு வதைப்போல எனது மருந்து தரவு என்பது ஏதோ ஒன்று அல்ல. இருப்பினும் அதுகுறித்து பீதியடை வதற்கு ஒன்றுமில்லை," என்று பிரதமர் கூறியுள்ளார்.