கம்போங் கிளாம் கடைகளுக்கு தொழில்நுட்ப உதவி

கம்போங் கிளாம் கடைகளுக்கு தொழில்நுட்ப உதவி

1 mins read

கம்போங் கிளாம் வட்டாரத்தை மேலும் கவர்ச்சிகரமாக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக அங்கு இயங்கி வரும் கடைகளுக்கு தொழில்நுட்ப உதவி கிடைக்கவுள்ளது. அக்கம்பக்க உருமாற்றுத் திட்டத்தின்கீழ், இணையத்தில் 'கூகல் மேப்ஸ்' எனப்படும் வரைப்படம்வழி வாடிக்கையாளர்களுக்கு ஒரு கடையின் உள்பகுதியைக் காணும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், செயலி ஒன்றைப் பயன்படுத்தி கடைகளில் வழங்கப்படும் சலுகைகளையும் பெற முடியும்.

வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சௌகரியம் தரும் விதமாக, அவர்கள் வாங்கிய பொருட்களைத் தூக்கிச் செல்லும் சிரமம் இருக்காது. கடைக்காரர்கள் வழங்கும் சேவையின் மூலம் பொருட்கள் அவர்களது வீடுகளுக்கு வந்து சேரும். கம்போங் கிளாம் கலாசார மையத்தை சிங்கப்பூரிலேயே தொழில்நுட்ப வசதியுடைய முதல் அக்கம்பக்க வட்டாரமாக உருமாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம். இதில் இதுவரை சுமார் 150 வணிகங்கள் பதிவுசெய்து கொண்டுள்ளன.