இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் நியாயமான, வெளிப்படையான, சமமான விதிகளின் அடிப்படையி லான ஒழுங்குமுறை தேவை எனச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார். இந்தியத் தலைநகரில் நடை பெற்ற 10வது டெல்லி கலந்துரை யாடலில் அவர் வியாழக்கிழமை உரையாற்றினார். கடற்பயணச் சுதந்திரத்திற்கு மிரட்டல் விடுக்கும் எந்தவொரு முயற்சியையும் சிங்கப்பூர் எதிர்ப் பது அவசியம் என்றும் டாக்டர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். "இந்தியாவுக்கும் ஆசியானுக்கும் இடையில் கடல் பாதுகாப்பின் வலுவாக்கம்" என்ற கலந்துரை யாடல் கருப்பொருளின் தொடர்பில் அவர் பேசினார்.
"பொருட்கள், சேவைகள், யோசனைகள் ஆகியவற்றின் வர்த்தகத்திற்குத் தடையாக இருப் பவற்றை நாம் அகற்றவேண்டும். "அதனால்தான், உலகின் அதிக வளர்ச்சியடைந்த பகுதிகள் சிலவற்றில் வர்த்தக தாராளமயத் திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப் படும் இக்காலகட்டத்தில், இந்தியா வும் ஆசியானும் தடை யற்ற வர்த் தகத்தை நிலைநாட்ட பெருமுயற்சி எடுப்பது மிகவும் முக்கியம்," என்றார் அவர்.
டெல்லி கலந்துரையாடல் மாநாட்டில் உரையாற்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்.

