இணையத் தாக்குல்களை முறிய டிக்க சிங்கப்பூர் ஆயத்தமாக இருந்தாலும் அதற்காக பல நட வடிக்கைகளை அமல்படுத்தி வரும்போதிலும் இந்தத் தாக்கு தல்களை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளும் வகையில் யாரும் முழு பாதுகாப்புடன் ஒதுங்கி இருந்துவிட முடியாது என்று நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் தெரிவித்து இருக் கிறார். இணையத் தாக்குதல் நடக் கும்போது அதை குறைகூறுவ தற்கு, சந்தேகப்படுவதற்கு, கிண் டல் செய்வதற்குக் கிடைத்த வாய்ப்பாக பார்க்காமல் அத்த கைய தாக்குதல்களைச் சமா ளிக்க பாடுபடும் அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அவர் நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் வலியுறுத்தினார்.
'இணையத் தாக்குதல்களை முறியடிக்கும் அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கவும்'
1 mins read

