இணையப் பாதுகாப்பு மறுஆய்வு முடியும் வரை சில திட்டங்கள் நிறுத்திவைப்பு

இணையப் பாதுகாப்பு மறுஆய்வு முடியும் வரை சில திட்டங்கள் நிறுத்திவைப்பு

1 mins read

சிங்கப்பூரின் வரலாற்றில் இல்லாத அளவுக்க ஆகப்பெரிய இணையத் தாக்குதல் நடத்தப்பட்டு இருப் பதைத் தொடர்ந்து விரைவில் தொடங்கப்பட இருந்த அறிவார்ந்த தேசம் தொடர்பான திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அரசாங்க அமைப்புகளின் இணையப் பாதுகாப்பை முழு மையாக மறுஆய்வு செய்து முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

எனவே அரசாங்கத்துடனான சுமார் 95 விழுக்காட்டு பரிவர்த் தனைகளை மின்னிலக்கப்படுத் தும் திட்டம் நடப்புக்கு வருவதற் கான காலக்கெடு 2023ஆம் ஆண்டு என்பது தள்ளிப்போடப் படலாம் என்று கூறப்படுகிறது. சிங்ஹெல்த் தரவு ஊடுருவல் ஆகக் கடுமையான விவகாரம் என்று குறிப்பிட்டுள்ள தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், அறிவார்ந்த தேசம் மற்றும் மின் னிலக்க அரசாங்கக் குழுமம் (எஸ் என்டிஜிஜி) புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திட்டங்களுக்கான அறிமுகத்தைத் தள்ளிவைக்கும் என்றார்.

இவ்வாறு தள்ளிப்போடுவதன் மூலம் அரசாங்க கணினி முறை களின் இணையப் பாதுகாப்பை மறுஆய்வு செய்யவும் தேவைப் பட்டால் கூடுதல் பாதுகாப்பு அம் சங்களை நடைமுறைப்படுத்தவும் எஸ்என்டிஜிஜிக்கு வாய்ப்பு கிட் டும்.