ஆப்பிள் நிறுவன வாடிக்கையாளர்கள், தங்களுடைய ஐடியூன்ஸ் கணக்குகளில் மோசடி கொள்முதல்கள் நடந்திருப்பதாக வும் ஆயிரக்கணக்கான வெள்ளி தங்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து கழிக்கப் பட்டு இருப்பதாகவும் புகார் தெரிவித்து இருக்கிறார்கள். தாங்கள் வாங்காத கொள்முதல்களுக் காக தங்கள் கணக்குகளில் இருந்து தொகை கழித்துக்கொள்ளப்பட்டு இருப் பதாக அவர்கள் கூறுகிறார்கள். இருந்தாலும் இந்தப் பிரச்சினை எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கிறது என் பது பற்றி கருத்து கூற நேற்று ஆப்பிள் நிறுவனத்தின் பேச்சாளர் மறுத்துவிட்டார். இது பற்றி நிறுவனம் ஆராய்ந்து வரு வதாக அவர் தெரிவித்தார். எவ்வளவு ஐடியூன்ஸ் பயனீட்டாளர்கள் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள் என்பது துல்லிய மாகத் தெரியவில்லை.
என்றாலும் சிங்கப்பூரில் செயல்படும் பெரிய வங்கிகளின் வாடிக்கையாளர்களே பெரும்பாலும் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்கள் உட்பட டஜன்கணக்கானவர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக நேற்று முதன்முதலாக சேனல் நியூஸ் ஏஷியா தெரிவித்தது. ஓசிபிசி வங்கியில் மட்டும் ஜூலையில் 58 தில்லுமுல்லு பரிவர்த்தனைகள் நடந்து இருப்பதாக அந்த வங்கி கூறியது என்று அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. ஜூலை தொடக்கத்தில் அந்த 58 பேரின் பரிவர்த்தனைகள் வழக்கத்திற்கு மாறாக இருந்ததைக் கண்டு அது பற்றி அந்த வங்கி புலன்விசாரணை நடத்தியது.
அந்த வங்கி புலன்விசாரணை நடத்தியது. அவை போலியான தில்லுமுல்லு காரியங்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட தும் அத்தகைய காரியங்களைத் தடுப்ப தற்கான நடவடிக்கைகள் நடப்புக்கு கொண்டுவரப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட வர்களுக்கு தாங்கள் உதவிவருவதாகவும் ஓசிபிசி பேராளர் ஒருவர் தெரிவித்ததாக சேனல் நியூஸ் ஏஷியா கூறியது.

