இர்ஷாத் முஹம்மது
வருங்காலத்தில் அனைத்துலக சமூகத்தோடு சிங்கப்பூர் ஒன்றி ணையும். அதனால் பல மொழிகள் புழங்கும் இடமாக சிங்கப்பூர் திகழும். அந்தச் சூழ்நிலையில் நம் தாய்மொழியை வாழவைக்க அனைவரது முயற்சியும் தேவை என்று செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு விக்ரம் நாயர் கூறியுள்ளார். சிறுபான்மை சமூகத்தில் உள்ள அனைவரும் ஒருவருக் கொரு வர் உதவவேண்டும். ஒருவர் எடுக்கும் முயற்சிக்கு சமூகம் உற்சாகமூட்டி ஆதர வளிக்க வேண்டும் என்றார் அவர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையின் தமிழ் இளையர் மாநாட்டின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திரு விக்ரம், 'சமூகமும் சமுதாயமும்' என்ற கருப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலில் இளைய பேராளர்களின் கேள்வி களுக்குப் பதிலளித்தார். வருங்காலத்தைப் பற்றிய சிந்தனையுடன் எதிர்நோக்க விருக் கும் பிரச்சினைகள் குறித்து இளையர்கள் கலந்துரையாடுவது குறித்து அவர் பெருமிதம் அடைந்தார். அதே வேளையில் வரலாற்றைப் பற்றி அறிந்துவைத்திருப்பது அவசியம் என்று 'ரீச்' அமைப்பின் துணைத் தலைவருமான திரு விக்ரம் வலியுறுத்தினார்.
ரீச்' எனும் அரசாங்கத்தின் கருத்தறியும் அமைப்பும் தேசியப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் நாடாளு மன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயருக்கு விளக்கம் அளிக்கும் தீர்த்தனா மாடசாமி படம்: இர்ஷாத்

