எஸ்.வெங்கடேஷ்வரன்
இந்திய சமூகம் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். கல்வி, தொழில் போன்ற பல விஷயங் களில் முன்னிலையில் இருக்க வேண்டும். ஆனால் நீரிழிவு நோயாளிகள் விகிதத்தில் முதலாவது இடத்தில் இருப்பது வருத்தத்திற்குரியது என்று கோவிந்தசாமி பிள்ளை கல்யாண மண்டபத்தில் (பிஜிபி) நேற்று நடந்த சுகாதார விழாவில் கலந்துகொண்டு பேசினார் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா. இப்பட்டியலில் கடைசி நிலைக்கு வர இந்திய சமூகம் முயற்சி செய்யவேண்டும் என்றார் அவர். "சமுதாயத்தில் உடல் நலம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க இந்த விழா முக்கிய தளமாக அமைகிறது. சுகாதாரத் திட்டங் களைப் பற்றி அறியவும் இந்த விழா உதவுகிறது," என்று குறிப் பிட்டார் அமைச்சர் இந்திராணி. இந்து அறக்கட்டளை வாரியத் தின் மருத்துவ ஆதரவு சேவைகள் குழுவும் மீடியாகார்ப் ஒலி 96.8 வானொலியும் இணைந்து மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்திருந்த விழாவில் கிட்டத்தட்ட 1,500 பேர் பங்கேற்று இலவச சுகாதாரப் பரிசோதனைகளைச் செய்துகொண்டனர்.
நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், பார்வைக் குறைபாடு, குறிப்பிட்ட வகையான புற்றுநோய்கள் போன்ற வெவ்வேறு பரிசோதனைகள் அங்கு இடம்பெற்றன.
பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா (இடமிருந்து மூன்றாவது) சுகாதாரப் பரிசோதனைகள் செய்யும் பொதுமக்களோடும் தொண்டூழியர்களோடும் கலந்துரையாடுகிறார்.

