நிதி நிர்வாகம் பற்றிய விழிப்புணர்வு பெற்ற இந்திய சமூகத்தினர்

1 mins read
0f14410a-73e6-4e73-966e-0545938ef7c6
-

இர்ஷாத் முஹம்மது

சேமிப்பு, முதலீடு, காப்புறுதி, ஓய்வுக்கால தயார்நிலை குறித்த பல தகவல்களை இந்திய சமூகத் தைச் சேர்ந்த சுமார் 500 பேர் இம்மாதம் 21ஆம் தேதி பெற்றனர். நிதி கல்வியறிவுக் கழகத்தின ரும் இந்தத் துறையில் மிகுந்த அனுபவமுடைய திரு எம். பி. செல்வமும் இணைந்து இந்திய சமூகத்தினருக்கென இலவச பயி லரங்கிற்கு ஏற்பாடு செய்திருந் தனர்.

காலை முதல் மாலை வரை நாள் முழுவதும் நடைபெற்ற பயில ரங்கில் பங்கேற்பாளர்கள் தங் களின் நிதி நிர்வாகத் திட்டங்கள் குறித்த ஐயங்களைப் பற்றி நிபுணர் களிடம் கேட்டு தெளிவுபெற்றனர். எவ்வித காப்புறுதித் திட்டங்கள் எடுப்பது சிறந்தது, 'மெடி‌ஷீல்டு லைஃப்' காப்புறுதித் திட்டம் அவ சியமா, கல்வி சேமிப்புத் திட்டம் தேவையா போன்ற பல அத்தியா வசிய கேள்விகளைப் பங்கேற்பாளர் கள் கேட்டு அதற்கான விளக்கங் களைப் பெற்றனர் என்று கூறினார் நிதி கல்வியறிவுக் கழகத்தின் இயக்குநர் 61 வயது திரு வி மகேந்திரன்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ஜகபர் அலி, டாக்டர் டி. சந்துரு, வி. மகேந்திரன், எம்.பி. செல்வம், நிகழ்ச்சி நெறியாளர் புரவலன். படம்: எம்.பி.செல்வம்