புதிய தானியங்கி பாரந்தூக்கி களும் வாகனங்களும் பாசிர் பாஞ் சாங் முனையத்தில் சோதனைத் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள் ளன. இவை உற்பத்தித் திறனை 25 விழுக்காடு வரை உயர்த்தும் என் பதால், துறைமுக நடுவம் என்ற சிங்கப்பூரின் நிலையைப் பன் மடங்கு உயர்த்தும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. துறைமுகம் மற்றும் கப்பல் முனையத்தின் நடத்துநரான சிங் கப்பூர் துறைமுக ஆணையம் (பிஎஸ்ஏ) நேற்று தனது தானியங்கி பாரந்தூக்கிகள் பற்றி போக்கு வரத்து அமைச்சர் கோ பூன் வான், போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின், செய்தி யாளர்கள் ஆகியோருக்கு பாசிர் பாஞ்சாங் முனையக் கட்டடத்தில் விளக்கமளித்தது. புதிய தானியங்கி பாரந்தூக்கி முறையின் மூலம், கப்பலிலிருந்து கொள்கலன்களைத் தூக்கி அவற்றை நீண்ட பாரம் சுமக்கும் வாகனங்களில் ஏற்றும் பணியைப் பகுதி தானியக்கி முறையில் செய்ய முடியும்.
நடைமுறை சோதனைத் திட்டத்தில் ஈடுபடுத்தப்படும் தானியங்கி வழிகாட்டி வாகனங்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

