கடலுக்குள் சென்றவரைத் தேடும் பணி தொடர்கிறது

கடலுக்குள் சென்றவரைத் தேடும் பணி தொடர்கிறது

1 mins read

சாங்கி கடலுக்குள் நேற்று முன்தினம் நடந்து சென்றவரைத் தேடும் பணி நேற்றும் தொடர்ந்தது. அந்த ஆடவர் கடல் பகுதிக்குள் நடந்து சென்றதைப் பார்த்தவர்கள் போலிசுக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் தெரிவித் தனர். 2ஆம் கார் நிறுத்தும் இடத்துக்கு அருகில் உள்ள சாங்கி கடற்கரையில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் மாலை 5.45 மணிக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. "சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் தகவலின்படி, ஆடவர் ஒருவர் கடலுக்குள் நடந்து சென்றார் என்றும் பின்னர் அவர் கரைக்கு வரவில்லை என்றும் தெரிய வந்தது. கடல்நீருக்கு அடியில் தேடுதல் பணியை நாங்கள் முடுக்கி விட்டுள்ளோம்," என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.