தங்கள் கடப்பிதழ்களில் போலியான மலேசியா விசாவை வைத்திருந்த இலங்கை ஆடவர்கள் மூவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை தலா எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று அவர்களின் மலேசியா விசாக்களில் முரண்பாடுகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 26 வயது நல்லையா செல்வமணி ரோஹன், 23 வயது கந்த நாதன் ஜசிதரன், 20 வயது ரூபன் தயஸ்ரீபின்சன் ஆகியோர் இலங்கைக்கு வெளியே வேலை தேடி வந்தனர். நல்லையாவும் கந்தநாதனும் மற்றொரு இலங்கை முகவர் ரஜனிகாந்தை அணுகி தலா 305,000 இலங்கை ரூபாய் ($2,600) கொடுத்து தாங்கள் மலேசியாவுக்குச் செல்ல ஏற் பாடு செய்யச் சொன்னார்கள்.
போலி மலேசியா விசா: மூன்று இலங்கை ஆடவர்களுக்கு எட்டு மாதச் சிறை
1 mins read

