துவாஸ் சோதனைச்சாவடி வழி சிங்கப்பூருக்குள் 1,820 கிராம் ஹெராயின் போதைப் பொருள் கொண்டு வர முயன்ற 22 வயது மலேசிய ஆடவர் நேற்று முன்தினம் காலை கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று தெரிவித்தது. கொண்டுவரப்பட்ட ஹெரா யின் ஆறு தனித்தனி பொட் டலங்களில் கட்டப்பட்டிருந்ததா கவும் அவற்றை ஆடவர் தன் தோள் பையில் வைத்துத் தூக்கி இருந்த தாகவும் அறியப்படுகிறது. சோதனைச்சாவடி அதிகாரிகள் தன்னைச் சோதித்தபோது ஆடவர் தன் மோட்டார் சைக்கிளில் தப்ப முயற்சி செய்தார். ஆடவர் வைத்திருந்த ஹெராயினின் அளவு 860 போதைப்பொருள் புழங்கிகளுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான அளவு என்று போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1.8 கிலோ போதை பொருள் சிக்கியது
1 mins read

