பீஷான் வாகனம் நிறுத்தும் இடத்தில் இளையர் கூட்டம் கைகலப்பு

பீஷான் வாகனம் நிறுத்தும் இடத்தில் இளையர் கூட்டம் கைகலப்பு

1 mins read

ஒரு மாணவர் இணையத்தில் கூறிய கருத்து தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறிய சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் மூன்று இளையர்கள் கைது செய்யப்பட்டனர். பீஷானில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிகழ்ந்த இச்சண்டையில் மேலும் ஐவர் சிறுசிறு காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 16, 17 வயதுடைய இளையர்கள் பள்ளிச் சீருடை அணிந்திருந்ததாகவும் அவர்கள் பீஷானில் உள்ள ஒரே உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்றும் அறியப்படுகிறது. சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது.