முன்னாள் காப்புறுதிப் பிரதிநிதிக்கு நான்காண்டு தடை உத்தரவு

முன்னாள் காப்புறுதிப் பிரதிநிதிக்கு நான்காண்டு தடை உத்தரவு

1 mins read

கிரேட் ஈஸ்டர்ன் ஆயுள் காப்புறுதி நிறுவனத்தின் முன்னாள் பிரதிநிதி திருவாட்டி சான் சீட் ஃபன்னுக்கு சிங்கப்பூர் நாணய வாரியம் நான்காண்டு தடை உத்தரவு விதித்துள்ளது. நிதி ஆலோசனை சேவை வழங்குவது, நிர்வாகப் பொறுப் பேற்பது, இயக்குநராகப் பதவி ஏற்பது, நிதி ஆலோசனை நிறுவனங்களில் முக்கிய பங்குதாரர் ஆவது ஆகியவற்றில் திருவாட்டி சான்னுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வாரி யம் நேற்று தெரிவித்தது. காப்புறுதித் தரகராகப் பணிபுரிவது, அல்லது ஒரு நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பது ஆகியவற்றுக்கும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரேட் ஈஸ்டர்ன் பிரதிநிதியாக இருந்தபோது திருவாட்டி சான் 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை வாடிக்கையாளர்களின் காப்புறுதிச் சந்தாக்கள், வட்டிக் கட்டணங்கள் என $12,900 தொகையைக் கையாடல் செய்து தன் சொந்த கடன்களை அடைக்கப் பயன்படுத்தியதாக அறியப்படுகிறது.