சிங்கப்பூரின் சமூகச் சேவை களைப் பற்றிய தகவல்களைப் பெற மக்கள் இனி ஒரே இணைய வாசலை நாடலாம். நேற்று துவக்கி வைக்கப்பட்ட இந்த இணையவாசல் நாட்டின் பல்வேறு சமூகச் சேவைகள் தொடர்பான முழுமையான விவரங்களையும் தொகுத்து வழங்கும் ஒரே தகவல் தளமாக அமைகிறது. குறிப்பிட்ட ஒரு சாரார், திட் டத்தின் வகை, பகுதி, அமைப்பு எனப் பயன்பாட்டாளர்கள் சமூகச் சேவை வழிகாட்டியின் இணைய வாசல் அல்லது கைபேசி செயலி வழி சமூகச் சேவைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
உதாரணத்திற்கு, இணைய வாசல் வழி வீட்டுக்கு அருகில் உள்ள மூத்தோர் பகல் நேர நட வடிக்கை நிலையங்களைப் பற்றி யும் திட்டங்கள், நிதி உதவிகள் குறித்த தகவல்கள் பற்றியும் அறிந்துகொள்ளலாம். இந்த இணையவாசல் ஃபேர் மோண்ட் ஹோட்டலில் நடைபெற்ற சமூகச் சேவை உச்சநிலைக் கூட் டத்தின்போது தேசிய சமூக சேவை மன்றத்தால் துவக்கி வைக்கப்பட்டது. இதில் சமுதாய, குடும்ப மேம் பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பொது மற்றும் சமூகத் துறை யினருக்கு உதவக்கூடிய இத் தளம், சமூகச் சேவை நிபுணர்கள் தங்கள் சேவையை நாடி வரு வோருக்கு ஏற்ற திட்டங்களைத் தேடுவதில் நேரத்தைக் குறைத் துக் கொள்ளலாம்.

