போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கேள்வி

போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கேள்வி

1 mins read

சிங்ஹெல்த் சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின்மீது நடத்தப்பட்ட இணையத் தாக்குதலின் காரண மாக சிங்கப்பூரில் மிகப் பெரிய தகவல் ஊடுருவல் ஏற்பட்டது. இதன் தொடர்பாக சிங்கப்பூரின் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் விசாரிக்க உள்ளது. ஊடுருவல் சம்பவத்தைப் பற்றி தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையத்திற்குத் தெரிவிக்கப் பட்டதாக தொடர்பு, தகவல் அமைச்சின் பேச்சாளர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிங்ஹெல்த் மற்றும் இங்குள்ள பொது மருத்துவமனைகளின் தொழில்நுட்ப துணை நிறுவனமான ஒருங்கிணைந்த சுகாதார தகவல் அமைப்பு ஆகியவை பாதிக்கப்பட்ட நிறுவனங்கள். இதனால் பயனீட்டாளர்களின் தனிப்பட்ட தகவலைப் பாதுகாக்க அமைப்புகள், தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுவியிருக்க வேண்டும். 2014ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து நடப்பில் இருந்து வரும் இச்சட்டத்தை மீறும் அமைப்புகளுக்கு $1 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படலாம்.