ஆயர் ராஜா விரைவுச்சாலையை நோக்கிச் செல் லும் மத்திய விரைவுச்சாலையில் சுரங்கச்சாலைக்குச் சற்று வெளியே நேற்று பிற்பகல் 12.40 மணியளவில் சென்றுகொண்டிருந்த டாக்சியில் தீ பற்றியது. டாக்சியின் இயந்திரப் பகுதியில் மூண்ட தீயை அங்கு விரைந்து வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அணைத்தனர். அந்த டாக்சியின் ஓட்டுநரான 70 வயது ஆடவர் நெஞ்சு வலி காரணமாக சிங்கப்பூர் பொது மருத் துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தீக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மத்திய விரைவுச்சாலையில் டாக்சியில் தீ: ஒருவருக்குக் காயம்
1 mins read
-

