$1.2 பில்லியனுக்கு கனடாவிலிருந்து 66 புதிய ரயில்கள்

$1.2 பில்லியனுக்கு கனடாவிலிருந்து 66 புதிய ரயில்கள்

1 mins read
0f51e0a1-285a-40dc-b9c1-921ed660a073
-

வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு பாதைகளில் செயல்பட 66 புதிய ரயில்களை எஸ்எம்ஆர்டி நிறு வனம் வாங்க உள்ளது. இதற்கான $1.2 பில்லியன் ஒப்பந்தம் கனடாவின் 'பொம்பார்டியர்' என்ற பொறியியல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சேவை ஆதரவு ஒப்பந்தமும் இதில் அடங்கும். முப்பது ஆண்டுக்கு முன்னர் பெருவிரைவு ரயில்சேவை தொடங் கப்பட்ட காலத்திலிருந்து சேவை யாற்றிவரும் 66 முதல் தலைமுறை ரயில்கள் மாற்றப்பட உள்ளன. வரும் 2021ஆம் ஆண்டிலிருந்து புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப் படும்.

புதிய 'பொம்பார்டியர்' ரயில் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தெரிவித்துள்ளார். துவாஸ் ரயில் கிடங்கில் நேற்று நடைபெற்ற குத்தகை விருது நிகழ்ச்சியில் பேசியபோது அமைச் சர் கோ இதனைத் தெரிவித்தார். நிலைமையைக் கண்காணிக் கும் உணர்கருவிகள், ரயில் செயல்பாட்டை ஆய்வு செய்யும் கணினி அமைப்புகள் ஆகியவை புதிய அம்சங்களில் சில. ரயில்களில் வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகளைப் பொறியாளர்கள் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளைச் செயல்படுத்த இந்த அம்சங்கள் உதவுகின்றன. இதனால், ரயில் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு குறையும் என்றார் திரு கோ. புதிய 66 ரயில்களில் நான்கிற்கு தானியங்க தட கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்படும்.