வேலை ஓய்வு வயதை நிறுவனங் கள் தாமாகவே முன்வந்து உயர்த்த வேண்டும் என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் தலைவருமான இங் சீ மெங் நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். வேலை ஓய்வு பெறும் வயது 62 என்று சட்டம் குறிப்பிட்டாலும் அதன் பின்னரும் ஊழியர்கள் விரும்பினால் அவர்களை வேலை யில் வைத்திருக்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். ஊழியர்களின் வேலை ஓய்வு வயதை அண்மையில் உயர்த்திய கரையோர பூந்தோட்டங்களை அவர் பாராட்டினார். கரையோரப் பூந்தோட்டங்கள் அடுத்த ஆண்டு முதல் வேலை ஓய்வு வயதை 65க்கு உயர்த்தியுள்ளது.
அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. "கரையோரப் பூந்தோட்டங் களின் இந்த முயற்சிக்கு தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் ஆதரவளிக்கிறது. மற்ற வேலை இடங்களும் இதைப் பின்பற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்," என திரு இங் தெரிவித்தார். கண்காட்சிகள், பொழுது போக்கு இடங்கள், கேளிக்கை ஆகியவற்றுக்கான தொழிற் சங்கத்தைச் சார்ந்த நிறுவனமான கரையோரப் பூந்தோட்டங்களில் 60 வயதுக்கும் மேற்பட்ட ஊழி யர்கள் 20 பேர் வரை உள்ளனர். "மூத்த ஊழியர்களுக்கு அனு பவம் உள்ளது. முதலாளிகள் அவர்களை மதித்து மீண்டும் வேலையில் அமர்த்த வேண்டும்," என்று அவர் கூறினார். 2018-07-26 06:00:00 +0800

