பீஷான் ஸ்திரீட் 12 புளோக் 130ல் உள்ள திறந்தவெளி கார் நிறுத்துமிடத்தில் இரு ஆடவர்களுக்கு இடையிலான மோதலில் ஏற்பட்ட காயங்களுக்காக டாக்சி ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் இரு நாட்களுக்கு முன்னர் நடந்ததது. கறுப்பு டி-=சட்டை அணிந்திருந்த ஆடவர், டாக்சிக்கு வெளியில் இருந்த ஓட்டுநரை மிரட்டும் விதமாகக் கூச்சலிட்டு சைகை காட்டுவதை 'ஸ்டோம்ப்' இணையத்தள காணொளியில் காண முடிந்தது. காணொளி பதிவாகும் முன்னரே ஓட்டுநரை அந்த ஆடவர் பலமுறை குத்தி அவரை கீழே விழச் செய்ததாகக் கூறப்படுகிறது. ஓட்டுநர் எழுந்து நின்றபோது ஆடவர் மீண்டும் அவரை ஆபாச சொற்களால் ஏசி, அவரது முகத்தில் குத்தினார். பின்னர் அந்த ஆடவர் தனது பழுப்பு நிற காரை அங்கிருந்து ஓட்டிச் சென்றார். உதவிக்கான அழைப்பு பிற்பகல் 2.42 மணிக்கு வந்ததாக சிங்கப்பூர் போலிஸ் படை தெரிவித்தது. சிறிது நேரம் கழித்து டாக்சி ஓட்டுநர் டான் டோக் செங் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கார் நிறுத்துமிட மோதலில் காயமடைந்த டாக்சி ஓட்டுநர்
1 mins read
-

