கம்போங் கிளாம், ஆயர் ராஜா, சொங் பாங், மரின் பரேட், தெம்பனிஸ் ஈஸ்ட், சுவா சூ காங் ஆகிய ஆறு அக்கம்பக்க போலிஸ் நிலையங்கள் சீரமைப்புப் பணிகளுக்காக ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து 2019ம் தேதி ஜூலை 31ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளன. இவை முழுமையான தானியக்க நிலையங்களாகச் சீரமைக்கப்பட வுள்ளன. இதன்மூலம் போலிஸ் அதிகாரிகள் சமூகத்திற்குச் சேவையாற்ற தளத்தில் செயல்பட வசதியேற்படும் என்று போலிசின் ஃபேஸ்புக் செய்தி தெரிவித்தது. அவசரமற்ற சேவைகளுக்கு மின்னியல் போலிஸ் நிலையங்களுடன் http://www. police.gov.sg/e-services என்ற இணைய முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
ஆறு அக்கம்பக்க போலிஸ் நிலையங்கள் தற்காலிக மூடல்
1 mins read
-

