நடப்பாண்டில் சிங்கப்பூரில் உள்ள 12 தேசிய நினைவுச் சின்னங்களைப் பரா மரிக்கவும் புதுப்பிக்கவும் சுமார் $2.1 மில்லியன் பொது நிதி பயன்படுத்தப்பட உள்ளது. தேசிய நினைவுச் சின்ன நிதி மூல மாக அந்தத் தொகை பகிர்ந்தளிக்கப் படும் என தேசிய மரபுடைமைக் கழகம் நேற்று தெரிவித்தது. நினைவுச் சின்னங்களின் புதுப்பித் தலுக்குத் தேவைப்படும் செலவில் உறுதுணை புரிய $2 மில்லியன் செல விடப்பட இருக்கும் அதேவேளை அவற்றைப் பராமரித்தலுக்கான செல வில் $113,000 உதவிநிதியாக அளிக் கப்படும்.
இவ்வாறு நிதி உதவி பெறும் நினைவுச் சின்னங்களில் சிராங்கூன் ரோட்டில் உள்ள ஸ்ரீஸ்ரீநிவாசப் பெரு மாள் கோ-யிலும் ஒன்று. இக்கோயிலின் மறுமேம்பாட்டுக் குழுவின் தலைவரான திரு ராஜன் கிருஷ்ணன் கூறு கையில், "தேசிய மரபுடமைக் கழ கத்துக்கும் இந்து அறக்கட்டளை வாரியத்துக்கும் இடையிலான பங்காளித்துவத்தின் நல்ல உதாரணம் இந்த நிதி உதவி. "காலம் கால மாகக் கட்டிக்காக்கப்பட்டு வரும் மரபுடைமையை புராதனத்தன்மை மாறாது வருங்கால தலைமுறையிடம் ஒப்படைக்க இது உறுதுணை புரியும்," என்றார். அல்=அப்ரர் பள்ளிவாசல், ஆர்மீனி யன் தேவாலயம் உள்ளிட்டவை நிதி பெறும் இதர 11 நினைவுச் சின்னங் களுள் அடங்கும். கடந்த 2016ஆம் ஆண்டு அறி முகம் செய்யப்பட்ட தேசிய நினைவுச் சின்ன நிதியின் ஒரு பகுதியான பராமரிப்பு நிதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

