ரத்தக்காயத்தில் ஆடவர்; படம் பிடித்த கும்பலுக்கு இடையே பரிவு காட்டிய சரவணன்

1 mins read
0f19b735-fee2-42ba-9403-c2ce0b1fec0a
-

தமிழவேல்

வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண் டிருந்த திரு ஜி.சரவணன், 40, பிராட்வே ஹோட்டல் முன்புள்ள பேருந்து நிறுத்தத் தில் ஓர் இந்திய ஆடவர் ரத்த காயத்தில் கிடந்ததைப் பார்த்ததும் சற்றும் யோசிக் காமல் தமது காரை நிறுத்திவிட்டு அந்த ஆடவருக்கு உதவ விரைந்தார். விபத்தில் அடிபட்டுவிட்டதாக முத லில் கருதிய சரவணன், காயங்களைப் பார்த்த பின்னர்தான் அந்த ஆடவர் கத்தியால் தாக்கப்பட்டதை உணர்ந்தார். முழு நேர கட்டுடல் பயிற்றுவிப்பாளரான திரு சரவணன், எப்போதும் தமது காரில் முதலுதவிப் பெட்டி ஒன்றை வைத்துக் கொள்வது வழக்கம். அது நேற்று முன் தினம் அவருக்குக் கைகொடுத்தது.

உடலின் பல பகுதிகளில் இருந்த வெட்டுக்காயங்களால் தினேஷ் என்று நம்பப்படும் ஆடவரின் தலை, கை, கால் களிலிருந்து ரத்தம் வழிந்துகொண் டிருந்தது.

முதலுதவிப் பெட்டியுடன் எப்போதும் இருக்கும் சரவணன் இதற்கு முன்னரும் பலருக்கு உதவி இருக்கிறார். படம்: சரவணண்