இணைய வர்த்தகம், கடன் தொடர்பான பல்வேறு மோசடி சம்பவங்கள் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். 18 முதல் 43 வரையிலான அவர்களுள் எண்மர் ஆண்கள், அறுவர் பெண்கள். பொங்கோல், செங்காங் வட்டாரங்களில் மொத்தம் 42 சம்பவங்களில் $338,000 தொகை பண மோசடி செய்யப்பட்டுள்ளது. திங்கள், செவ்வாய் இரு நாட்கள் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் அங் மோ கியோ போலிஸ் பிரிவின் அதிகாரிகள் அவர்களைக் கைது செய்தனர். மோசடி வழக்கு தொடர்பாக இவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். இணைய விளம்பரங்களை உடனே நம்பிவிடாமல் அறிமுகம் இல்லாதவர்களுடன் தனிநபர் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
$338,000 பண மோசடி வழக்கில் 14 பேர் கைது
1 mins read

