விலங்கினங்கள் தொடர்பான விவகாரங்கள் இனி வேளாண், உணவு, கால்நடை, மருத்துவ ஆணையத்தால் கையாளப்படாது. அந்தப் பொறுப்பினை இனி தேசிய பூங்காக் கழகம் ஏற்கும். இதன்வழி தாவரங்கள், விலங் கினங்கள் பற்றி மேலும் முழுமை யான புரிந்துணர்வு ஏற்படுவதோடு மனிதன், -விலங்கு தொடர்புகளை யும் மேலும் சிறந்த முறையில் நிர்வகிக்க இயலும்.
வனவிலங்கு பாதுகாப்பு, தோட்டக்கலை அறிவியல் ஆகிய வற்றில் தேசிய பூங்காக் கழகத் தின் நிபுணத்துவமும், விலங்கு தாவர சுகாதாரத்தில் வேளாண், உணவு, கால்நடை, மருத்துவ ஆணையத்தின் நிபுணத்துவமும் இனி இணையும். இது குறித்துச் சுற்றுப்புற, நீர்வள அமைச்சும் தேசிய வளர்ச்சி அமைச்சும் கூட்டு அறிக்கை வெளியிட்டன. புது அரசாங்க அமைப்பான சிங்கப்பூர் உணவு அமைப்பு 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று வேளாண், உணவு, கால்நடை, மருத்துவ ஆணையத்தின் பொறுப் புகளை ஏற்கும்.

