மாணவரிடம் பணம் கொடுத்து போதைப்பொருள் வாங்கச் சொல்லிய ஆசிரியர் வேலையி லிருந்து நீக்கப்பட்டுள்ளார். மெரிடியன் உயர்நிலைப் பள்ளியில் இணைப்பாட நட வடிக்கை ஆசிரியராகப் பணியாற் றிய திருவாட்டி செலெஸ்ட்டா ஈ சீயிங் தன் போதைப்பொருள் புழக்கம் குறித்து 2016ல் பள்ளி யில் படித்துக்கொண்டிருந்த கைரூல் நாயிம் முகம்மது நாசிரி டம் அந்தரங்கமாகப் பகிர்ந்து கொண்டார். இதன் தொடர்பாக கல்வி அமைச்சுக்குத் தகவல் கிடைத்த தும் திருவாட்டி செலெஸ்ட்டா சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதம் பணியிலிருந்து தற்காலி கமாக நீக்கப்பட்டதாகவும் அதன் பின் அவருக்கும் பள்ளிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கல்வி அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
அவருக்கு வழக்கமாகப் போதைப்பொருள் விற்பவர் அதிக விலை கூறியதால் இப்போது 20 வயதாகிய கைரூல் குறைவான விலையில் போதைப் பொருள் கிடைக்க வழி செய்ததாக அறியப்படுகிறது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் கைரூல் பிடிபட்டார். அவர் வீட்டில் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்ட தோடு அவர் கென்னபிஸ் பயன்படுத்தியதாக சிறுநீர் சோத னையும் உறுதி செய்தது. கைரூல் ஆசிரியரிடம் போதைப்பொருள் விற்கவில்லை என்றும் அவர் சார்பாகத்தான் வாங்கினார் என்றும் கைரூலின் வழக்கறிஞர் அனில் பல்சன்டணி கூறினார்.

