'கிராப்' ஓட்டுநருக்குச் சிறை

'கிராப்' ஓட்டுநருக்குச் சிறை

1 mins read

பாதசாரிகள் சாலையைக் கடக்கும் பகுதியை நெருங்கிய போதும் கிராப் ஓட்டுநரான 42 வயது ஹோ பீ கியட் வாகனத்தை நிறுத்தாமல் மின்சக்தி மிதிவண்டியில் வந்த ஒரு பெண்மணியையும் அவருடன் இருந்த இரண்டு சிறுவர்கள் மீதும் மோதினார். 23 வயது திருவாட்டி மரியா- உல்ஃபா, அவருடன் மிதிவண்டியில் பயணம் செய்த மூன்று வயது சிறுமி மற்றும் ஏழு வயது சிறுவன் ஆகியோர் மோதலினால் மிதிவண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டனர். ஆனால் அவர்களை மோதிய பின்னரும் வாகனத்தை நிறுத்தாமல் சிறுவனின் உடல்மீது வாகனத்தை ஏற்றினார்.

அதன் பின்னரே வாகனத்தை நிறுத்திவிட்டு காயமுற்றிருந்த மூவருக்கும் உதவினார். அலட்சியமாக வண்டி ஓட்டிக் கடுமையான காயங்கள் விளைவித்ததற்காக நேற்று முன்தினம் ஹோவுக்கு ஒரு வார சிறைத் தண்டனையும் வாகனம் ஓட்டுவதற்கு ஈராண்டு தடையும் விதிக்கப்பட்டன. விபத்தினால் திருவாட்டி மரியா-உல்ஃபாவுக்கு உடலில் பெரிய காயங்களும் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டிருந்தன. சிறுவனுக்கு இடது காலில் முறிவும் சிறுமிக்குச் சிறு காயங்களும் ஏற்பட்டன. கவனக்குறைவுடன் பிறருக்குக் கடும் காயங்கள் ஏற்படுத்திய குற்றத்திற்காக ஹோவுக்கு ஈராண்டுவரை சிறைத் தண்டனையும் $5,000 அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.