வாஷிங்டன்: தொழிற்துறைப் பொருட்களுக்கான வர்த்தக இடையூறுகளைத் தவிர்க்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை நிர்வாகி ஜான் கிளோட் யங்கரும் இணங்கியுள்ளனர். இது தொடர்பாக உயர்நிலை பணிக் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக் குழு வரி, விலைக் கழிவு கள், வரியில்லா வர்த்தகம் ஆகிய வை தொடர்பாக கலந்துரையாடி ஆய்வு செய்யும். அண்மையில் அதிபர் டிரம்ப் எக்கு, அலுமினியம் ஆகிய உலோகங்களுக்கு வரி விதித் தார். அதுமட்டுமல்லாது, அமெரிக்கா வுக்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கும் உதிரி பாகங் களுக்கும் 25 விழுக்காடு வரி விதிக்கப்போவதாக அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இதனால் பெருமளவில் வர்த்தகப் போர் மூளும் அபாயம் உள்ளதாக அஞ்சப்பட்டது.
வர்த்தகப் போரைத் தவிர்க்க டிரம்ப், யங்கர் இணக்கம்
1 mins read

