அரசாங்கப் பணிகளுக்கான $1.8 மில்லியனுக்கு மேற்பட்ட மதிப்புடைய குத்தகைகள் தொடர்பில் ஏமாற்றிய சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் முன் னாள் பொறியாளருக்கு நேற்று ஈராண்டு, ஒரு மாதம், ஆறு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ராஜ்குமார் பத்மநாதன் (படம்) எனும் அந்த 49 வயது ஆடவர், $150,000க்கு மேற்பட்ட 19 ஏமாற் றுக் குற்றாச்சாட்டுகளை இவ் வாண்டு மே மாதம் 9ஆம் தேதி ஒப்புக்கொண்டார். எஞ்சி உள்ள தொகைக்கான மேலும் 198 ஏமாற் றுக் குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிப்பின்போது கருத்தில் கொள் ளப்பட்டன. அவற்றுடன் ஒரு மோசடிக் குற்றச்சாட்டும் அதிகா ரத்துவ ரகசியம் தொடர்பான எட்டு குற்றச்சாட்டுகளும் சேர்த் துக்கொள்ளப்பட்டன.
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் பொறியாளராக 1989 ஆம் ஆண்டில் சேர்ந்தார் ராஜ் குமார். விமானங்களின் பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிக ளுக்கான கோரிக்கைகளை வரை வது அவரது முக்கிய பணியாகும். தனியார் குத்தகை நிறுவனங் கள் இந்தப் பணிகளுக்கு ஏலக்குத் தகைகளைச் சமர்ப்பிக்கும். அந்தப் பணிகள் முடிந்தவுடன் தற்காப்பு அமைச்சு அந்நிறுவனங்களுக்குப் பணத்தைச் செலுத்திவிடும். ராஜ்குமார், 2012ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி தனது வேலையிலிருந்து விலகினார். அமைச்சை ஏமாற்ற, ஓர் உத்தியை உருவாக்கினார். குல்வில் ஏவியே ஷன்ஸ் சிஸ்டம் எனும் நிறுவ னத்தைத் தமது மனைவியின் பெயரில் தொடங்கி, அதன் மூலம் குத்தகைகளைப் பெற்றார். ஆனால், அதன் உண்மையான உரிமையாளர் ராஜ்குமார்தான்.

