1,200 ஹைபிரிட் வாகனங்களை வாங்கும் கம்ஃபர்ட்டெல்குரோ

1,200 ஹைபிரிட் வாகனங்களை வாங்கும் கம்ஃபர்ட்டெல்குரோ

1 mins read
5e75ccda-356b-465b-adfd-893173eb2fd7
-
multi-img1 of 2

டாக்சி துறையில் டீசல் எண்ணெய்யைப் பயன்படுத்தும் வழக்கத்தை விட்டு அகலும் முயற்சியில் கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் பெட்ரோல்-மின்சார வாகனங்களை வாங்க உள்ளது. சுமார் 1,200 ஹியுன்டே ஐயொனிக் ஹைபிரிட் வாகனங்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் கொண்டு வரப்படும். டாக்சி துறையில் நிலைத்தன்மைக்கான அறிகுறிகள் தெரிவ தாகவும் வாடகைக்கு எடுக்கும் பழைய, புதிய ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு இணங்கப் புது டாக்சிகளை வாங்கத் தொடங்கி உள்ளதாகவும் நிறுவனப் பேச்சாளர் டேமி டான் நேற்று கூறினார். கடந்த பத்தாண்டுகளாகவே கம்ஃபர்ட்டெல்குரோ ஹியுன்டெ நிறுவனத்திடமிருந்து சொனாட்டா, ஐ40 வகை வாக னங்களை வாங்கி வருகிறது. ஜூன் இறுதியில் சிங்கப்பூரில் மொத்தம் 4,159 பெட்ரோல்-மின்சார ஹைபிரிட் டாக்சிகள் இருந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.