அனைத்துலக நகைக் காட்சியில் 223 விற்பனையாளர்கள்

1 mins read

ஆண்டுதோறும் நடைபெறும் சிங்கப்பூரின் ஆகப் பெரிய நகைக் கண்காட்சி மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடந்துவருகிறது. சுமார் 150 மில்லியன் அமெ ரிக்க டாலர் ($204 மில்லியன்) மதிப்புள்ள நகைகள் கண்காட்சி யில் வைக்கப்பட்டுள்ளன. 26 நாடுகளைச் சேர்ந்த 223 விற்பனையாளர்கள் நாளையுடன் நிறைவுபெறும் நான்கு நாள் கண்காட்சியில் பங்குபெறுகின் றனர். நகைக் கண்காட்சியில் இந் தியாவிலிருந்து 25க்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெறுகின்றன. அரிய நவரத்தினங்களும் விலையுயர்ந்த கற்களும் கண் காட்சியில் வைக்கப்பட்டுள்ளதோடு நவரத்தினங்கள் குறித்த தகவல் களை வல்லுநர்கள் வருகை யாளர்களுடன் பகிர்வர். அரிய கற்களில் முதலீடு செய்வதற்கான வழிகள் என்பது பற்றிய தகவல்களை வருகையாளர்கள் கேட்டறிய லாம். காலை 11.30 மணி தொடங்கி இன்று மாலை 8.30 மணி வரையிலும் நாளை மாலை 7.30 மணி வரையிலும் கூடம் 'ஏ', 'பி' யில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் $200 முதல் $20 மில்லியன் வரையிலான நகை ஆபரணங்களை மக்கள் வாங்கலாம்.