சராசரியாக வளர்ச்சியடையும் பிள் ளைகளோ சிறப்புத் தேவை கொண்ட பிள்ளைகளோ இரு சாராருக்கும் ஏற்ற வகையில் ஒரு புது பாலர் பள்ளி புக்கிட் தீமாவில் திறக்கப்பட்டுள்ளது. 'பிரைட் பாத்' பாலர் பள்ளி வெவ்வேறு கற்றல் தேவைகள் கொண்ட மூன்று முதல் ஆறு வயதுடைய பிள்ளைகளை ஏற்கும். முதலில் 70 பிள்ளைகள் வரை எடுக்கக்கூடிய இப்பள்ளியில் 'ஆட்டிசம்' மற்றும் வேறு தேவை கள் கொண்ட குறைபாடுடைய பிள்ளைகள் சேர்க்கப்படுகின்றனர். அவர்களின் பாடத்திலேயே குறுக் கீட்டு சிகிச்சைகள் இணைக் கப்படும்.
உயர்ந்த அறிவுத் தேர்ச்சியுடைய பிள்ளைகளுக்குக் கூடுதல் கவ னம் தேவைப்படுவதால் அவர்க ளுக்கும் ஏற்புடைய விதத்தில் இத் தகைய பாடங்கள் அமையும். 55 ஃபேர்வேஸ் டிரைவ் முகவரியில் அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்த பிரைட் பாத் பாலர் பள்ளி அனைத்து பிள்ளைகளையும் உள்ளடக்கும் கல்வியை அளிக்கும் பாலர் பள்ளிகளில் ஒன்றாகும்.
பிரைட் பாத் பாலர் பள்ளியில் உள்ள பிள்ளைகளுடன் உரையாடுகிறார் அதிபர் ஹலிமா யாக்கோப். படம்: சாவ் பாவ்

