சிராங்கூன் ரோட்டில் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த இரண்டு நாட் களில் அச்சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் நேற்று நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டனர். தினேஷ் செல்வராஜா, 26, என்பவரைத் தாக்கியது தொடர் பாகக் கைது செய்யப்பட்ட ஏழு சிங்கப்பூரர்களில் ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஷர்வின் ராஜ் சுராஜ், 17, ஹாரிஸ் சண்முகநாதன், 22, அர் ஜுன் ரெத்னவேலு, 23, விக்டர் அலெக்ஸாண்டர் ஆறுமுகம், 24, தினேஷ் குமார் ரவி, 28, ஆகி யோர் குற்றம் சாட்டப்பட்டவர் கள். உயிருக்கு ஆபத்து விளை விக்கும் ஆயுதங்களுடன் கலகத் தில் ஈடுபட்டதாக இவர்கள் ஒவ் வொருவர் மீதும் குற்றம் சுமத்தப் பட்டது.
கடந்த புதன்கிழமை பிற்பகல் 2.20 மணியளவில் பிராட்வே ஹோட்டல் முன்புள்ள பேருந்து நிறுத்தத்தில் தடி, வெட்டுக்கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தினேஷ் தாக்கப்பட்டதாக குற்றச் சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப் பட்ட ஆயுதங்களில் சமுராய் வாளும் ஒன்று என இதற்கு முன் கூறப்பட்டது. ஆனால், வாள் பற்றி நீதிமன்ற ஆவணங் களில் எதுவும் குறிப்பிடப்பட வில்லை.

