புத்தாக்கத்தையும் தொழில்நுட் பத்தையும் நோக்கிக் கடல்துறை செல்வதாக இளையர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள் ளார்கள். சிங்கப்பூர் கடல்துறை, துறை முக ஆணையம் ஏற்பாடு செய்தி ருந்த 'சிங்கப்பூர் கடல்துறை உரையாடல்' நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இவ்வருடாந்தர நிகழ்ச்சியில் இதுவரை கண்டிராத வகையில் மொத்தம் 400 உயர்கல்வி மாணவர்கள் கலந்துகொண்டார்கள். சிங்கப்பூர் கடல்துறை, துறை முக ஆணையம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர் களுடன் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது இதுவே முதல் முறை. 'வருங்காலத்துக்கு ஏற்ற சிங்கப்பூர் கடல்துறையை உருவாக்கலாம்' என்பதே இவ் வாண்டுக் கருத்தரங்கின் கருப்பொருள். இதில் சுகாதார, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் டாக்டர் லாம் பின் மின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அமைச்சர் உள்பட கடல்துறை, துறைமுக ஆணையத்தின் தலைமை நிர்வாகி திரு ஆண்ட்ரு டான் மற்றும் சில கடல்துறை நிபுணர்களும் கலந்துரையாடல் குழுவில் இருந்தனர்.
சிங்கப்பூர் கடற்துறையில் அதிகமான வேலை வாய்ப்புகள்
1 mins read

