மறுமேம்பாடு காணும் பழைய அப்பர் தாம்சன் ரோடு

1 mins read
dad702d2-e908-4b6d-bfe3-132d56a8919c
-

மூன்று கிலோமீட்டர் நீளமுடைய பழைய அப்பர் தாம்சன் ரோடு 1960களிலும் 1970களிலும் புகழ் பெற்ற கார் பந்தயங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. அதைப் பொழுதுபோக்கு நடவ டிக்கைகளுக்கான இடமாக மாற் றும் திட்டத்தின்கீழ் அதற்கான பணிகள் முன்னரே அறிவிக்கப் பட்டிருந்தன. சற்று தாமதமாக இப்போது அந்தப் பணிகள் தொடங்கியுள் ளன. இருவழிச் சாலையாக இருந்த இந்தப் பாதையை இப்போது ஒரு வழிச் சாலையாக, புதுப் பூங்கா இணைப்பாக மாற்றியமைக்கும் திட்டத்தைத் தேசிய பூங்காக் கழகம் தொடங்கியுள்ளது. இதற்கான வேலைகள் சென்ற ஆண்டு இறுதியில் தொடங்கப் பட்டு அடுத்த ஆண்டு முற்பகுதிக் குள் முடிவுற திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், இதில் தாமதம் ஏற் பட்டதால் அடுத்த ஆண்டு இறு தியில்தான் இந்தப் பணி முடிவு பெறும் என்று தேசிய பூங்காக் கழகப் பேச்சாளர் இவ்வாரம் தெரி வித்திருந்தார். மேம்பாட்டுப் பணிகள் தொடர் பாகப் பொதுமக்களை ஈடுபடுத்து வதில் தாமதம் ஏற்பட்டதே இதற் குக் காரணம் என்றும் பேச்சாளர் கூறினார்.

இருவழிச் சாலையாக இருந்த பழைய அப்பர் தாம்சன் ரோடு இப்போது ஒருவழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கும் அறிவிப்புகள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்