மின்னணு சாதனங்களைத் தினமும் 6.5 மணி நேரம் பயன்படுத்தும் 12 வயதினர்

மின்னணு சாதனங்களைத் தினமும் 6.5 மணி நேரம் பயன்படுத்தும் 12 வயதினர்

2 mins read

தங்களின் 12 வயது பிள்ளை தினமும் ஆறு மணி நேரம் தொலைக்காட்சி பார்ப்பதை அறிந்து அதனால் அதிருப்தி அடையும் பெற்றோர் ஏராளம். இருப்பினும், மின்னணு சாதனங்களை அதே அளவு நேரத்தை பிள்ளைகள் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். 'டிகியூ இன்ஸ்டிடியூட்' எனும் ஆய்வுக் குழுவும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் வெளிவந்ததைத் தொடர்ந்து இது கவலைக்குரிய ஒன்று என நிபுணர்கள் கூறு கின்றனர்.

தவறான, முறையற்ற தகவல் களைக் காண்பதும் சரியில்லாத தூக்க நேரங்களை கடைப் பிடிப்பதும் சாதனங்களுக்கு அடிமையாவதும் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளில் ஒருசில. ஆய்வின் மூலம் சிங்கப்பூரில் உள்ள 12 வயது நிரம்பிய பிள்ளைகள் ஒரு வாரத்திற்குச் சுமார் 46 மணி நேரம் மின்னணு சாதனத்தைப் பயன்படுத்து கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. அது ஒரு நாளில் ஆறரை மணி நேரமாகும். 9 வயது பிள்ளைகளோ ஒரு வாரத்திற்கு 24 மணி நேரத்திற்கு மேலாக அவ்வாறு செய்கின்றனர். அது ஒரு நாளைக்குச் சுமார் மூன்றரை மணி நேரம். ஆய்வின் முடிவுகளைச் சற்று பார்ப்போம். மின்னணு சாதனத் திரைக்கு முன்னால் 12 வயதினர் செலவிடும் நேரம் ஒரு வாரத்துக்கு 46 மணி நேரம் ஆகும்.

9 வயதினர் மின்னணு சாதனத் திரைக்கு முன்னால் வாரத்துக்கு 24 மணி நேரம் செலவிடுகின்றனர். ஆய்வில் பங்கேற்ற 12 வயதினரில் 77 விழுக்காட்டினர் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது. அதே போல ஆய்வில் பங் கேற்ற 9 வயதினரில் 55 விழுக் காட்டினர் சமூக ஊடகம் மற்றும் குறுஞ்செய்தி செயலிகளை அதிக மாகப் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.