அரசாங்க வாடகை வீடுகளில் ஒற்றையர்களும் சிறிய குடும்பங்களும் அதிகம் வசிப்பதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் நீண்ட காலத்திற்கு குடியிருக்கிறார்கள் என்றும் பாதி பேர் தங்களுடைய வாடகை வீடுகளில் 10 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம் இருந்து வந்துள்ளதாகவும் அந்த விவரங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் 50,000 வாடகை வீடுகள் இருக்கின்றன. அரசாங்க வாடகை வீட்டு விண்ணப்பதாரர்களின் சராசரி வயது 43 ஆண்டுகள்.
அத்தகைய வீடுகளில் வசிக்கும் பிள்ளைகளின் சராசரி வயது 11. வாடகை வீடுகளில் வசிக்கும் பெரும்பாலான குடும்பங்களில் நான்கு பேர் அல்லது அதற்கும் குறைவானவர்களே இருக்கிறார்கள். வாடகை வீடுகளில் சுமார் 40% ஒற்றையர்கள் வாழ்கிறார்கள். இத்தகைய வீடுகளில் வசிப்பவர்களில் கால்வாசிபேர் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாக தங்கள் வாடகை வீடுகளில் வசித்து இருக்கிறார்கள். சென்ற ஆண்டு அரசாங்க மானிய உதவித்திட்டத்தின் மூலம் சுமார் 1,000 வாடகைதாரர்கள் வீட்டு உரிமையாளர்களாக ஆகியிருக்கிறார்கள்.

