தரமில்லா நிர்வாகம் குறித்து பாசிர் ரிஸ் சென்ட்ரல் உணவு அங்காடி நிலையத்தின் கடைக் காரர்கள் பலர் குறை கூறியுள்ளனர். இந்த நிலையம் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இயங்கி வரு கிறது. தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) ஃபூட்ஃபேர் அமைப்பு நிர்வகித்து வரும் இந்த நிலையத்தின் அதிகாரபூர்வத் திறப்பு விழா இம்மாதம் 14ஆம் தேதியன்று நடைபெற்றது. இரண்டு மாடி கொண்ட உணவு அங்காடி நிலையத்தில் மொத்தம் 42 கடைகள் உள்ளன. பெயர் வெளியிட விரும்பாத கடைக்காரர்கள் சிலர் உணவு அங்காடி நிலையம் நிர்வகிக்கும் முறை தொடர்பில் தி நியூ பேப்பர் நாளிதழிடம் தங்களுடைய அதிருப்தியைத் தெரிவித்தனர்.
பாசிர் ரிஸ் சென்ட்ரல் உணவு அங்காடி நிலையத்தில் ரொக்க மில்லா பரிவர்த்தனை முறை கடை பிடிக்கப்படுகிறது. வசூலிக்கப்படும் பணத்தை ஐந்து மாதங்கள் கழித்துதான் நிர்வாகம் தங்களிடம் தருவதாகக் கடைக்காரர்கள் கூறினர். அதுமட்டுமல்லாது, வாடிக்கை யாளர்கள் சாப்பிட்டுவிட்டு கிளம்பிச் சென்றதும் அவர்கள் பயன்படுத்திய தட்டுகள், கரண் டிகள், முள்கரண்டிகள் ஆகியவற் றைத் துப்புரவு ஊழியர்கள் அப்புறப்படுத்துவதில்லை என்றும் கடைக்காரர்கள் கூறினர். மேலும் தட்டுகள், கரண்டிகள், முள்கரண்டிகள் ஆகியவை கழு வப்படும்போது சேதமடைவதாகவும் கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
பாசிர் ரிஸ் சென்ட்ரல் உணவு அங்காடி நிலையத்தில் வாடிக்கை யாளர்கள் சாப்பிட்டு வைத்த தட்டுகள் அப்புறப் படுத்தப்படாமல் இருப்பதாக குறை கூறப்படுகிறது. படம்: ஃபேஸ்புக்

