நிலத்தின் பயன்பாட்டை அதி கரிக்கும் வழிகளை கண்டறியவும் பசுமையான சூழலை உருவாக் கவும் 61 மில்லியன் வெள்ளி செலவில் புதிய சோதனைச் சாலை அமைக்கப்படுகிறது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் சுர்பானா ஜூரோங் ஆலோசனை நிறு வனம், என்டியுவைத் தளமாகக் கொண்ட சோதனைச் சாலை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் அமையும் சோதனைச் சாலையில் 11 சுற்றுப்புறத் திட்டங்கள் குறித்து ஆராயப்படும். இதன் மூலம் காணப்படும் தீர்வு, நிறுவனங் களுடனும் அரசாங்க அமைப்பு களுடனும் பகிர்ந்து கொள்ளப் படும். குளிரூட்டும் மேற்கூரை தகடுகள் குறித்து ஆராய்வதும் திட்டங்களில் ஒன்று.
இந்தத் தகடுகள், குளிரூட்டு வதற்கான எரிசக்தியைச் சேமித்து காற்றை தூய்மையாக்கு கிறது. மற்றொரு திட்டத்தில் திரவ இயற்கை எரிவாயுவை சிறந்த வகையில் சேமித்து வைக்கும் வழிகள் கண்டறியப் படும். அடுத்த ஆண்டுக்குள் அமையும் சோதனைச் சாலையில் நூறு பேராசிரியர்கள், ஆய் வாளர்கள், முனைவர் பட்டப் படிப்பு மாணவர்கள், பொறி யாளர்கள் பணிபுரிவர். இவர்கள், எதிர்காலத்தில் கட்டட வடி வமைப்பை மாற்றியமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

