சிங்கப்பூரில் ஆண்டுதோறும் 1.76 பில்லியன் நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்கள் பயன்படுத்தப்படுவ தாகவும் அதில் 20 விழுக்காட்டுக் கும் குறைவாகவே மறுபயனீடு செய்யப்படுவதாகவும் சிங்கப்பூர் சுற்றுச்சூழல் மன்றம் நேற்று வெளியிட்ட கருத்தாய்வு முடிவு தெரிவிக்கிறது. அதன்படி கிட்டத்தட்ட ஒருவர் தினமும் ஒரு பிளாஸ்டிக் என்ற வீதத்தில் நெகிழி பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இணையம் வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்தாய்வில் இங்குள்ள பேரங்காடிகளிலிருந்து சுமார் 820 மில்லியன் நெகிழி பைகளை ஆண்டுதோறும் எடுத் துச் செல்வதை அரசு சாரா அமைப் பான சிங்கப்பூர் சுற்றுச்சூழல் மன்றம் கண்டுபிடித்தது. அவற்றில் 2 விழுக்காட்டை மட்டுமே பயனீட்டாளர்கள் மறு பயனீடு செய்கின்றனர். மூன்றில் இரண்டு பங்கு பைகள் குப்பைகளை அப்புறப்படுத்துவ தற்குப் பயன்படுத்தப்படுகின்றன. 'டிலாய்ட்' எனப்படும் அனைத் துலக ஆலோசனை நிறுவனத்தின் உதவியுடன் மன்றம் கடந்த ஆறு மாதங்களாக இந்த ஆய்வை மேற்கொண்டது.
ஓராண்டில் சிங்கப்பூர் 467 மில்லியன் 'பிஇடி' எனப்படும் 'பாலிஎத்திலின் டெரிப்தாலேட்' போத்தல்கள், பயன்பாட்டுக்குப் பிறகு எறிந்துவிடக்கூடிய 473 மில்லியன் நெகிழிப் பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

