சிங்கப்பூரில் மூன்றாவது தரவு மையத்தை அமைக்க இருப்பதாக கூகல் நேற்று அறிவித்தது. இந்த வட்டாரத்தில் வேகமாக அதி கரித்து வரும் தேவைகளைப் பூர்த்திசெய்யும் விதத்தில் இந்த மையம் நிறுவப்படுவதாக அமெரிக்க இணைய நிறுவனமான கூகல் தெரிவித்தது. இந்தப் புதிய முதலீட்டை அடுத்து சிங்கப்பூரில் கூகல் தரவு மையங்களின் மொத்த முதலீடு 850 மில்லியன் அமெரிக்க டாலர்களாக (S$1.157 பில்லியன்) உயர்கிறது. புதிய தரவு மையத்தை அமைப்பதன் மூலம் சிங்கப்பூரில் கூகல் நிறுவனம் தற்போது செலவிடும் தொகையுடன் 350 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் S$476.5 மில்லியன்) அதிகமாக செலவிட இருப்பதாக கூகல் பேச்சாளர் 'தி பிசினஸ் டைம்ஸ்' பத்திரிகையிடம் தெரி வித்தார்.
ஜூரோங் வெஸ்ட்டில் கூகல் நிறுவனத்தின் இரண்டு தரவு மையங்கள் ஏற்கெனவே இருக்கின்றன. அவற்றுக்கு மிக அருகில் மூன்றாவது மையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கி விட்டதாக அவர் சொன்னார். இந்தப் புதிய மையம் 2020ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும். ஏற்கெனவே கட்டப்பட்டு இருக்கும் இரண்டு மையங்களின் மொத்த பரப்பளவுக்கு ஈடான பெரிய நிலத்தில் மூன்றாவது மையம் அமைக்கப்படுவதாகவும் அவர் சொன்னார். பெரிய தொழில்நுட்ப நிறுவன மான கூகல், புதிய வேலைகளின் எண்ணிக்கை பற்றி தன் இணைய வாசலில் ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால், "எங்களது வேலைவாய்ப்பு இணையப்பக்கத்தில் பட்டிய லிடப்பட்டுள்ள வேலைகளுக்கு ஆட்களை நியமித்து வருகிறோம்," என்று அந்தப் பேச்சாளர் குறிப் பிட்டார்.

