முன்கூட்டியே கட்டணத்தைக் காட்டும் 'ரைட்'

முன்கூட்டியே கட்டணத்தைக் காட்டும் 'ரைட்'

1 mins read

'ரைட்' எனப்படும் சவாரி சேவை நிறுவனம் இனித் தன் செயலிவழி அழைப்போருக்கு முன்கூட்டியே கட்டணத்தைத் தெரிவிக்கும் வசதியை வழங்க இருப்பதாக நேற்று அறிவித்தது. இதே வசதியை 'ஜஸ்ட்கிராப்' என்று சென்ற ஆண்டு கிராப் நிறுவனம் அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து ரைட் நிறுவனமும் அதே பாதையில் செல்ல இருக்கிறது. சுமார் 7,000 டாக்சி ஓட்டு நர்களை இதன்வழி இணைத்துக் கொள்ள முடியும் என்றும் இதனால் தற்போது உள்ள ஐந்து நிமிடங்களிலிருந்து நான்கு நிமிடங்கள்தான் பயணிகள் காத்திருக்க வேண்டும் என்றும் நிறுவனம் கூறியது.